Wednesday, October 15, 2014

பகிர்ந்து சென்ற நாட்கள் !

அன்பான தோழி ! அன்பான தோழி !
பணிகள் பல இருந்தும், பேசாமல் இருந்ததில்லை,
என் பிறந்த தேதி, உன்னிடம்  பகிர்ந்தப்பின்பு ,
என் பிறவி பயன், நான் உணர்ந்தேன்,
உன் பிரிவு என்னை வாட்டினாலும்,
உன் இருப்பை, என் மனம் விரும்பினாலும்,
உன் நகைமுகம் ஒன்றின், நினைவு போதும்,
இனிவரும், என் நாட்கள் அனைத்தும் கடந்து போகும்.
பகிர்ந்து சென்ற நாட்கள் !!!!

Thursday, May 23, 2013

என்னோடு இருந்தாள் போதும்

உன் நட்பொன்று போதும் பெண்ணே, என் வாழ்வு அமைதியாய் செல்லும்,

நீ என்னோடு இருந்தாள் போதும் என் மனதின் வலிமை கூடும்,

என் தாய் தந்தை போல நீயும், எனக்களிக்கும் நம்பிக்கை போதும்,

என் வாழ்வின் வெற்றிகள் அனைத்தும் என் கைகள் எளிதில் எட்டும்........



 

Tuesday, May 21, 2013

உன்னோடு நான்

உன்னோடு  பேசும்போது, என் மனது லேசாய்  ஆகும் ,

உன் குரலை  கேட்டால் போதும் என் மனதுக்குள் , சிறு கவிதைகள் தோன்றும் ,

உன் நட்பு ஒன்று போதும் பெண்ணே, இந்த ஜென்மம் முழுமை காணும்.

 

Wednesday, April 28, 2010

உன்னை கேட்கிறேன்

சொல்வதற்கு ஏதும் இல்லை, சொல்லாமல் போவதற்கு மனமும் இல்லை,கேட்டு பெறுவதற்கு யாருமில்லை,உன்னை கேட்காமல் விடுவதற்கு என் மனமும் இல்லை, ஆதலால் கேட்கிறேன்- உன்னை பற்றி புரிந்துகொள்ள எனக்கு சந்தர்ப்பம் தருவாயா!!!

Tuesday, March 2, 2010

நட்புக்காக

"நம் நட்புக்கு தேவை மனப்பரிமாற்றம், நாம் செயல்படுவதற்காக அல்ல புரிந்துகொள்வதற்காக, ஏன் என்றால், நாம் மௌனமொழி பேசினாலும், நம் மனம் நட்பின் ஆழத்தை புரிந்துகொள்லட்டும் , நட்பே என்னில் ஊர்ந்துகொள் ....."

நட்பின் வருத்தங்கள்

"நம் நட்பினில் ஏற்படும் சில வருத்தங்கள் ரோஜாவில் இருக்கும் முல்லை போல, ரோஜாவின் முல் ஏப்படி ரோஜாவுக்கு அழகோ அதுபோல் நம் நட்பின் வருத்தங்கள் நம் நட்பை அழகாக வளர்க்கும், நட்பே என்னை மன்னிப்பாயா"

முகம் காட்டு

உன் முகம் காண ஆசை! உன் முகத்தின் அழகைக் காண அல்ல, உன் கண்களின் மைவிழியில் ஒளிந்திருக்கும் அமைதியை காண!!! -- "உன்னால் என் மனம் அமைதி கொல்லட்டும்."